நாரம்மல காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோரின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாரம்மல காவல் பிரிவின் மெதியகனே பகுதியில் மாடு திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளிக்க வந்த ஒருவரின் முறைப்பாட்டை பதிவு செய்யத் தவறியதால், அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








