தலவாக்கலை, அக்கரபத்தன  எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (03.10) காலை குறித்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே திடீரென கலைந்த வந்த குளவிகள் தாக்கியுள்ளன.

காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் 15 பேரும் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 பேர் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் எஞ்சிய 4 பேர்  தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here