நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று  (10.07.2024) நள்ளிரவு 1.30 மணியளவில் கொழும்பு நோக்கி சென்ற கூழர் ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 28 கிலோ 750 கிராம் கேரளா கஞ்சா வவுனியா பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டது.

வவுனியா நகரப் பகுதியில் பொலிஸாரினால் வீதி சோதனை மேற்கொள்ளப்பட்டபோது  28 கிலோ 750 கிராம் கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய இரு சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர் .

அத்துடன் அவர்கள் கேரளா கஞ்சா கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கூலர் வாகனமும்  பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் 10.07.2024 வவுனியா நீதிமன்றில்   முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here