கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்திட்டிய பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவன் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ 205 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here