நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹொகரெல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 24 ஆம் திகதி ஹொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடகல்லே வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணும் பெண்ணும் வேகமாக பயணித்துள்ளனர்.
இவர்களை சோதனை செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது.
இது குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது.
இதனையடுத்து குருநாகல் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.
இதனை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சர்ஜன்ட் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்டுவருவதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.








