காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காயம் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








