நாடுகடத்தப்பட்ட ஏதிலிகளை ஏற்றிச் சென்ற இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை தரையிறக்குவதற்கு மறுத்ததையடுத்து கொலம்பியா மீதான வரிகளை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதுடன் பொருளாதாரத் தடைகளையும் விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து பொருட்களுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்போது காணப்படும் 25 சதவீத வரிகள் 50 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவும் அமெரிக்கா மீது 50 சதவீத வரிகளை விதிப்பதாகக் கூறினார்.
அமெரிக்க இராணுவத்தின் நாடுகடத்தல் விமானங்கள் நுழைவதைத் தான் மறுத்ததாக குஸ்டாவோ பெட்ரோ நேற்று கூறினார்.
நமது சக குடிமக்களை குற்றவாளிகளைப் போல நடத்தாமல், பொதுமக்களை விமானங்களில் வரவேற்பேன் என்றும், புலம்பெயர்ந்தோரை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.








