வரும் திங்கட்கிழமை (18) காலை 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் வழங்கும் பிரதான பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக இத்தடை அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகள் மட்டுமின்றி பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை மற்றும் மொரட்டுவ பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படும்.
இந்த இடையூறால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.








