ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எக்ஸ் பதிவொன்றில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்திப்பு நடந்ததாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு கூட்டாண்மை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இந்தியாவுடனான நீண்டகால நட்பு மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளை பெரிதும் மதிப்பதாகவும், இந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் நாமல் ராஜபக்ச மறு பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here