வடக்கு தொடருந்து மார்க்கத்தின் கடவைகளைப் பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அநுராதபுரம் ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து மார்க்கத்தைப் புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், வடக்கிற்கான தொடருந்து சேவையை இன்று (28) முதல் வழமை போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு – கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான தொடருந்து காலை 5:45க்கு புறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வடக்கு தொடருந்து மார்க்கத்தில் உள்ள சில கடவைகளில் இதுவரை பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாமையால் மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமெனத் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.








