Sunday, June 14, 2026
No menu items!

தொடருந்து

தொடருந்துகளில் வர்த்தகங்களில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானம்!

தொடருந்துகளில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த தொடருந்து பாதுகாப்பு அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார். தொடருந்து பயணிகளிடம் இருந்து வரும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று இலங்கை நடமாடும் தொடருந்து வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தகம் என்ற பெயரில் திருட்டுகள் இடம்பெறுவதாக பயணிகளிடமிருந்து முறைப்பாடுகள்...

யாழ்.கொடிகாமத்தில் தொடருந்து விபத்தில் பெண் ஒருவர் பலி!

யாழ்.கொடிகாமத்தில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் நட்சத்திர மஹால் திருமண  மண்டபத்திற்கு அருகாமையில் பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. காங்கேசந்துரையிலிருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி புகையிரதம் கொடிகாமம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது பெண் ஒருவர் கொடிகாமம் நட்சத்திரமகால் திருமண மண்டபத்திற்கு அருகாமையிலுள்ள கடைக்கு செல்வதற்காக ...

பணிப்புறக்கணிப்பில் தொடருந்து ஓட்டுநர்கள் – நாடு முழுவதும் சேவைகள் பாதிப்பு!

தொடருந்து ஓட்டுநர்கள் நாளை நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஒழுங்கற்ற சமிஞ்சை கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாததால் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடருந்துகளும் சேவையில்...

காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்க புதிய திட்டம்!

தொடருந்துகளுடன் மோதி காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான திட்டமொன்றை வனஜீவராசிகள் திணைக்களம் தயாரித்துள்ளது. சுற்றாடல் அமைச்சு, தொடருந்து திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் பங்குபற்றுதலுடன் இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, கல்ஓயா தொடருந்து நிலையத்திலிருந்து ஹிங்குராக்கொடை தொடருந்து நிலையம் வரையில் காட்டு யானைகள் அதிகளவில் விபத்துக்கு உள்ளாகக் கூடிய 7...

தொடருந்து சமிக்ஞை அதிகாரிகளின் அசமந்தம் – ஏற்படவிருந்த பாரிய விபத்து!

கண்டி பிரதான தொடருந்து நிலையத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட தொடருந்து சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே தொடருந்து பயணித்தின் போது கடமையிலிருந்த இருவரும் உறங்கிய நிலையில், குறித்த தொடருந்து கண்டி தொடருந்து நிலையத்தின் 3ஆவது மேடையை சென்றடைந்தது. அந்த நேரத்தில் தொடருந்து சமிக்ஞைகள் உரிய முறையில் ஒளிரவில்லை...

கடலோர தொடருந்து சேவையில் ஏற்பட்ட தடங்கல்!

கடலோர தொடருந்து மார்க்கத்தின் தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து தண்டவாளத்தின் உடைவு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

தொடருந்தில் மோதி காட்டு யானைக் குட்டி உயிரிழப்பு..!

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான தொடருந்து பாதையில் மீனகயா கடுகதி தொடருந்தில் மோதி படுகாயமடைந்த மட்டுமொறு காட்டு யானைக் குட்டி உயிரிழந்துள்ளது. அதன்படி, தொடருந்து விபத்தில் உயிரிழந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 7 ஆகும். கடந்த 19 ஆம் திகதி இரவு 11.20 மணியளவில், மீனகயா கடுகதி தொடருந்தில் மோதிய ஏழு காட்டு யானைகளில் 6 யானைகள்...

தடம் புரண்ட புகையிரதம்!

கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று இன்று (29) தடம் புரண்டுள்ளது. அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜின தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.  

தொடருந்தில் பயணித்த இளைஞன் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிழப்பு!

தொடருந்து மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று(19.11)கிரிபத்கொடை பகுதியில் நடைபெற்றுள்ளது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த அதிவேக தொடருந்தின் மிதிபலகையில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளார். கனேமுல்ல பிரதேசத்தைச்சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு- காங்கேசன்துறை ரயில் சேவைகள் ஆரம்பம்!

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் கடவைகளைப் பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரம் ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து மார்க்கத்தைப் புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், வடக்கிற்கான தொடருந்து சேவையை இன்று (28) முதல் வழமை போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு - கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img