கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (13.12.2024) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நெவில் சில்வா கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று தொடர்பில் பக்கச்சார்பாக செயற்பட்டு இரத்தினபுரி குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 14 கோடி ரூபா பெறுமதியான பொருட்களைப் பலாத்காரமாகப் பெற்றுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது.

இதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நெவில் சில்வா கடந்த 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here