கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை இன்று (12) மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான புகையிரத அபிவிருத்தி திட்டம் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புதிய அட்டவணை பின்வருமாறு:
கொழும்பு கோட்டை முதல் தலைமன்னார் வரை:
– நவம்பர் 12, 2024 தொடக்கம்
– கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 16.15 மணிக்கு புறப்பட்டு, 22.15 மணிக்கு தலைமன்னாரை வந்தடையும்.
தலைமன்னார் முதல் கொழும்பு கோட்டை வரை:
– நவம்பர் 13, 2024 தொடக்கம்
– தலைமன்னாரில் இருந்து அதிகாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, காலை 10:15 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.








