கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் இன்று அதிகாலை தீ ஏற்பட்டதுடன் வெடிப்பும் ஏற்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்ததாகவும், தீயை அணைக்க முடியாவிட்டால் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனினும் சரக்கு மற்றும் கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here