2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் அந்தஸ்து மற்றும் தரம் எதுவாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு பேராயரை சந்தித்த பின்னர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்த பிரேமதாச, 2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்தும் சட்டப் பொறிமுறையை உருவாக்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.








