ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (23.09.2024) கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் அவர்களைச் சந்தித்துப் ஆசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு பேராயர் இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதிபருடைய சுகத்தை விசாரித்ததுடன் சுருக்கமான உரையாடலிலும் ஈடுபட்டார்.
இலங்கையில் பெரும்பான்மையினரின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கொழும்பு பேராயர் மேதகு மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவரும் கணிசமான பொறுப்பை மக்கள் புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர் இது சவாலான பணியாக நிரூபிக்கப்படலாம். ஏழைகளின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அதிமேதகு கர்தினால் ரஞ்சித், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து உண்மையை வெளிக்கொணர நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.








