கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும்,தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது எனவும் அவ்வாறு ஆதரவு வழங்கினால் அது மக்கள் ஆணைக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிரணிகள் வசமே பெரும்பான்மை பலம் உள்ளது என்றும் எனவே, அரசாங்கத்துக்கு எதிரான சக்திக்கு ஆதரவு வழங்குவதில் தமக்கு பிரச்சினை இருக்காது எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here