தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் பயணித்த காரை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் கடந்த 17 ஆம் திகதி இரவு தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லொலுவ காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த இருவர் அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், வாகனத்திலிருந்து சில கோப்புகளை எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here