ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌஷால் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
கௌஷால் சில்வா ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,099 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதில் 3 சதங்களும் 12 அரைசதங்களும் உள்ளடங்கும்.
இந்தநிலையில் “ ஹொங்கொங் அணியைப் பயிற்றுவிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், அவர்களுடன் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும்” கௌஷால் சில்வா தெரிவித்துள்ளார்.








