நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் விளைவாக, அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய பரீட்சை நிலையத்திற்குச் செல்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.

மாற்றுப் பரீட்சை நிலையங்களை அணுக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here