வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்) வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வாரம் இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்கும் வாரமாக இருப்பதனால் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் உறுதியாக தபால் மூலம் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த பொது வேட்பாளர் விடயத்தில் சிவில் சமூக அமைப்பினர் நமக்கு ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தனர். தமிழரசு கட்சியையும் இந்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து எமது பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தில் தெரிவித்திருந்தனர்.
நேற்று(02.09) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர்.








