இந்தியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 500,000 வலி நிவாரணி மாத்திரைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த மாத்திரைகள் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியில் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here