வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர் களனி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

மேலும், இவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 20,000 “மான்செஸ்டர்” சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் எதிர்வரும் 17ஆம் திகதி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்ப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here