சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (26.10.2024) கைது செய்துள்ளனர்.

ஹட்டன், பொகவந்தலாவ, டின்சின் பிரதேசத்தில் அனுமதி பத்திரங்களின்றி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநப​ர்கள் இருவரும் 46 மற்றும் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here