சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 1,158 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 45 கிலோகிராம் கருவாடு என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புத்தளம் – தளுவ பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த பறிமுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி 32 பைகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மணல்தொட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here