மாத்தளை – தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலோகஹஎல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (02/04/2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புள்ளை கண்டலம் பிரதேசத்தில் வசிக்கும்  41 வயதுயைடவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 30 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1 பீப்பாய் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here