சட்டவிரோதமான முறையில் மேற்கத்திய வைத்திய நிலையமொன்றை நடத்தி வந்ததாகக் கூறப்படும் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓயாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் ஓயாமடுவ பொலிஸார் ஆகியோருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே  குறித்த  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தில் கடமையாற்றும் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மகாவிலச்சிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மானிங்கமுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மேற்கத்திய வைத்திய நிலையமொன்றை நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் மேலும்  தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த வைத்தியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here