நாடாளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, அமைச்சர் சமந்த வித்யாரத்னவை பொது விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிராகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

சாமர சம்பத் தசநாயக்க சம்பந்தப்பட்ட மோசடிகள் குறித்த கோப்புகள் தங்களிடம் உள்ளதாகவும், அவற்றை விசாரிப்பதாகவும் அமைச்சர் வித்யாரத்ன கூறினார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் வாதிட்ட சாமர சம்பத் தசநாயக்க, சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தாங்களும், அரசாங்க அமைச்சர்களும் பொது நிதியை வீணடித்து கஜுக்களை எவ்வாறு சாப்பிட்டனர் என்பதுதான் இப்போது பேசுபொருளாக இருப்பதாகவும், தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும், அதனால் தனக்குப் பயமில்லை எனவும் கூறினார்.

பின்னர் இருவரும் பொது விவாதம் ஒன்றில் கலந்து கொள்வதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here