சார்க் மாநாட்டை நடத்த வேண்டும் என்று பங்களாதேஷின் வெளியுறவுத் துறை அமைச்சின் ஆலோசகர் இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார் .

ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் 8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே பங்களாதேஷின் வெளியுறவுத் துறை அமைச்சின்ஆலோசகர் தௌஹித் ஹீசைன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக பேசிய அவர், 1996ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட கங்கை நீர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான விவாதங்களைத் தொடங்க வேண்டும்.

சார்க் நிலைக்குழு மாநாட்டினை நடத்த வேண்டியது அவசியம் என்றும் இதற்காக இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here