சீதுவை, ராஜபக்ஸபுரவிலுள்ள 12வது லேன் பகுதியில் நேற்று (21) இரவு 8.15 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சீதுவை நகர சபையில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரின் தந்தையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் 55 வயது ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்து, ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவும், சீதுவை பொலிஸாரும் கூட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here