இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இரத்தினபுரியில் 5 பேர், மாத்தறையில் 4 பேர் மற்றும் அவிசாவளையில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்  இராஜாங்க அமைச்சர் தென்னகோன், சீரற்ற காலநிலை காரணமாக 87,309 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனர்த்தம் மற்றும் அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் மக்களுக்கு உதவுவதற்காக முப்படையினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here