நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையின் காரணமாக, 12 மாவட்டங்களில் 2,357 குடும்பங்களைச் சேர்ந்த 9,392 பேர் பலவிதமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த வானிலை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு, 377 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அந்த நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
தற்போதைய பேரிடர் சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக பொதுமக்கள் உடனடி மருத்துவ ஆலோசனைகளை பெற 24 மணி நேர தொலைபேசி சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளதுபடி, 077 450 6602 என்ற இலக்கத்திற்கு அழைப்பின் மூலம் சுகாதார ஆலோசனைகளைப் பெறலாம்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் தொடரும் மழை காரணமாக மேலும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், அக்டோபர் 28 ஆம் திகதி வரை கனமழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.








