சீரற்ற வானிலை, காரணமாக அதிவேக நெடுஞ்சாலை நெடுகிலும் உள்ள மின்னணுப் பலகைகளில் காட்டப்படும் எச்சரிக்கைச் செய்திகள் தொடர்பில் சாரதிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) கேட்டுக்கொண்டுள்ளது.

பகல் நேரங்களிலும் சீரற்ற வானிலையால் இருளும் மூடுபனியும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அதிகார சபை, சாரதிகள் பயணிக்கும் போது போது தங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வாகன சாரதிகள் மணிக்கு 60 கி.மீ வேக வரம்பிற்குள் தங்கள் வாகனங்களை செலுத்துமாறும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும், விபத்துகளை தவிர்க்கும் வகையில் அதிவேகத்தில் திடீரென தடுப்பு (பிரேக்) போடுவதைத் தவிர்க்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

கனமழை மற்றும் மூடுபனியால் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளை தெளிவாக காண முடியாத நிலை இருப்பதாக மேலும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here