இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உள்நாட்டுப் போட்டிகளை ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.
SLC அறிக்கையின்படி, நடந்து வரும் உள்நாட்டு போட்டிகளை ஒத்திவைக்கும் முடிவு SLCயின் போட்டிக் குழுவால் எடுக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள்;
- மேஜர் கிளப் டி20 போட்டி
- டயர் ‘பி’ டி20 போட்டி
- கவர்னர்ஸ் கோப்பை
திருத்தப்பட்ட அட்டவணைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.








