மதுபாண போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய ND-9941 இலக்க பேரூந்து மீது நேற்று (16/07/2024)மதியம் 2 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பேரூந்து காப்பாளர் ஒருவரால் பியர் போத்தல் மூலம் பேரூந்துக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபர் பொதுமக்கள், பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால்  பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பியர் போர்த்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார்.

சாரதி பேரூந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பேரூந்தை நிறுத்தியுள்ளார்.

தனியார் பேரூந்து குழுவினருடன் ஏற்பட்ட நேர பிரச்சினை காரணமாக இந்த செயல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here