நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாக்கவும், ஊழல் மற்றும் மோசடி மூலம் தேசத்தை அழிக்க நினைக்கும் குழுவை எதிர்த்து நிற்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அருந்திக பெர்னாண்டோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினராக புத்தளம் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் சென்றவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here