மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்ததாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நுகர்வோர் சேவை அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட பணிப்பாளர் அவிஸ்கா விராஜனி உள்ளிட்ட அதிகாரிகள் குழு அந்த இடத்தை ஆய்வு செய்த போது மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதையடுத்து உரிமையாளரையும் கைது செய்திருந்தனர்.

அந்த இடத்தில் எண்ணெய் நிரப்பப்பட்ட கான்கள் போத்தல்கள் மற்றும் வெற்று எண்ணெய் கான்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் தொழிற்சாலைக்கு சீல் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here