ஆடிப்பிறப்பு என்பது ஆடி மாதத்தின் முதல்நாள் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழாவாகும். இந்த நாளின் மூலம், சூரியன் தெற்குத் திசை நோக்கிச் செல்லும் தட்சணாயண காலத்தின் தொடக்கம் ஆகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி பெருகும் இயல்பினை கொண்டது.
இந்த நாளில், தமிழ் மக்கள் வழக்கமாக ஆடிக்கூழ், கொழுக்கட்டை போன்ற சிறப்பு உணவுகளை தயார் செய்து குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்வது, வழிபாடு செய்வது மற்றும் உறவினர்களுக்குச் சிறப்புணவுகளை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
இவ்வாறு கொண்டாடப்படும் ஆடிப்பிறப்பு, வீடுகளிலேயே அன்று கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், இன்று சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் ஆடிப்பிறப்பு விழா கல்லூரியின் முதல்வர் திருமதி சுலபாமதி அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின்போது, ஆடிக்கூழ் தயாரிக்கப்பட்டு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என அனைவரும் ஒருமித்த மகிழ்ச்சியுடன் உண்டு கொண்டாடினர்.


(யாழ் நிருபர்-கஜிந்தன்)








