“சுவ செரிய” ஆம்புலன்ஸ் வாகனக் குழுவை நவீன தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைத்து 500 வாகனங்களாக விரிவுபடுத்தும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
“சுவ செரிய” அறக்கட்டளையில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் (EMTs) திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சிப் பயிலரங்கில் உரையாற்றிய அவர், உலகளாவிய முன்னேற்றமான தொழில்நுட்பங்களை இணைத்து ஆம்புலன்ஸ் சேவையை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதாக கூறினார்.
மேலும், கூடுதலாக 100 ஆம்புலன்ஸ்களை வாங்குவதற்காக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) கடன் உதவியின் கீழ் 20 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக 25 மானிய ஆம்புலன்ஸ்களும் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.








