புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் சொகுசு காரொன்றுடன் கெப் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியது.

இந் நிலையில் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (11) மாலை புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் நீர் வழங்கள் அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

அநுராதாபுர பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற சொகுசு காருடன் புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற கெப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது,  கார் குடைசாய்ந்து முற்றாக சேதமாகியுள்ளதுடன், காரில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

கெப் வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here