சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மெதவல விகாரைக்கு அருகில் நேற்று (12.07) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்று பாதுகாப்பற்ற முறையில் மற்றுமொரு வாகனமொன்றை முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here