ஜனாதிபதிக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (3/18/2025) ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், புதிய சட்டங்களைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது காவல்துறை திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாமல் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here