பல நாய்களை  பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்த பிரபல பிரித்தானிய விலங்கியல்  நிபுணருக்கு  அவுஸ்திரேலியாவில் 10 ஆண்டுகள் மற்றும் ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

53 வயதுடைய பிரபல நபரான ஆடம் பிரிட்டன் மிருகவதை மற்றும் விலங்கு கொடுமை தொடர்பான 56 குற்றச்சாட்டுகளை ஒப்புகொண்டுள்ளார்.

பிரிட்டன் விலங்குகளை சித்திரவதை செய்து அதன்போது, விலங்குகள்  உயிரிழப்பதையும்  படமெடுத்து புனைப்பெயர்களைப் பயன்படுத்தி வீடியோக்களை ஒன்லைனிலும் பகிர்ந்துள்ளார்.

கலாநிதி  பட்டம் பெற்ற உயர் தகுதி வாய்ந்த விலங்கியல் நிபுணரான பிரிட்டன், தனது துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணராகவும்  தன்னை நிலைநிறுத்தி உள்ளார்.

புலனாய்வாளர்கள் அவரது வீடியோ ஒன்றில் துப்பு கண்டுபிடிக்கும் வரை அவரது குற்றங்கள் பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here