அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், சபையின் புதிய உறுப்பினராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும், புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் வரை அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர வேண்டும்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த பின்னர் முதன்முறையாக ஒக்டோபர் 09ஆம் திகதி சபை கூடவுள்ளது.
அரசியலமைப்பு சபையின் ஏனைய உறுப்பினர்களில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளும் அடங்குவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.








