ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு கட்சிகளை சாராத குழுக்களில் உள்ளவர்கள் என அனைவரையும் நாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு மனிதநேயத்தின் நாமத்தினால் பாதுகாப்போம் என் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 65 ஆவது வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றைய தினம் ஹெட்டிபொல நகரில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வறுமையை ஒழிக்கும் முகமாக அனைத்து வரிய குடும்பங்களுக்கும் 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 20000 ரூபா வீதம் முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய பிரிவுகளுக்குள்ளடக்கி நிவாரணங்களை வழங்குவோம். நிரந்தர வறுமையே ஒழிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமக்கென்று வீடும் காணியுமில்லாதவர்களுக்கு வீட்டையும் காணிக்கான உரிமையும் பெற்றுக் கொடுப்போம். கம் உதாவ செயற்த்திட்டத்தை மீண்டும் உருவாக்குவோம். பிரதேச செயலாளர் பிரிவில் சர்வதேச தரத்திலான இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை உருவாக்கி, தகவல் தொழில்நுட்பம், கணிணி விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் சர்வதேச மொழிகள் போன்ற துறையை இளைஞர்களுக்கு கற்பித்து அறிவை மேம்படுத்தும் வேலை திட்டங்களை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
50 கிலோ கிராம் உள்ள உர மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும். பெரிய வெங்காயம், சோளம், உருளைக்கிழங்கு என்பன அறுவடை செய்யப்படுகின்ற போது ரணில் விக்கிரமசிங்க அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றார். விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கின்ற நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்குவோம். என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து நிர்வாக மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிப்போம். அத்தோடு ஜனாதிபதியை மக்கள் தொடர்பு கொள்வதற்கு தனியான அலகொன்றையும் நிறுவுவோம். மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முறையான தொடர்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு கிராமங்களையும் நகரங்களையும் அபிவிருத்தியடையச் செய்யும் கம் உதாவ நகர உதாவ வேலை திட்டங்களை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.








