இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட தேசத்தை கட்டியெழுப்புவதையோ அல்லது பற்றாக்குறை மற்றும் வரிசைகளின் யுகத்திற்கு திரும்புவதையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவலியுறுத்தியுள்ளார்.
நேற்று (16) பிற்பகல் பதுளையில் நடைபெற்ற “வெல்வோம் சிறிலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு மீண்டும் வரிசைகள் மற்றும் சிரமங்கள் நிறைந்த யுகத்திற்கு செல்ல இடமளிக்க வேண்டாம் என அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். கடந்த இரண்டு வருடங்களாக ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகள் தொடரும் ஆணைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
சஜித் பிரேமதாச, அனுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பலர் எமது மக்களின் துன்பங்களைப் பற்றி அலட்சியமாக இருந்த போதும் அவர்களின் தேவைகளை முதன்மைப்படுத்தி எமது நிலைமையை மேம்படுத்த அயராது உழைத்ததாக விக்கிரமசிங்க தெரிவித்தார்.








