பல வாகனங்கள் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) ஜனாதிபதி அலுவலகத்தில் போக்குவரத்து பணிப்பாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

ஜனாதிபதி செயலாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் போக்குவரத்துப் பணிப்பாளர் பல மணித்தியாலங்களுக்குள் விரிவான அறிக்கை ஒன்றை வழங்கியதாகவும், மேலதிக தகவல்களை இரண்டு வாரங்களில் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here