ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமென்று, பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவது முழு நாட்டுக்கும் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு நிச்சயம் நன்மையளிக்கும்.
மேலும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளர் ஐம்பது வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாத நிலைமை காணப்படுகிறது.








