அமெரிக்க வரி விதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவதற்குப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஜப்பானிய பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சர் ரியோசி அகாசாவா மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வொஷிங்டனுக்கு பயணமாகியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் வரி விதிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குக் கடந்த வாரம் இணக்கம் தெரிவித்தனர்.

வரி விதிப்பு குறித்து ஜப்பான் பெரிய சலுகைகளை வழங்காது எனவும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் விரைந்து செல்லாது எனவும் அந்நாட்டின் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், வரி விதிப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கு அமெரிக்காவை ஜப்பான் வலியுறுத்தும் என ஜப்பானிய அமைச்சரவையின் பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here