Sunday, April 19, 2026
No menu items!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அரச செலவின சட்டமூலத்தில் கையொப்பமிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய அரச செலவின சட்டமூலத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் 43 நாட்கள் தொடர்ந்த அமெரிக்க அரசாங்க முடக்கம் முடிவுக்கு வருகிறது. இதன் மூலம், 700,000-க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் பணிபுரிந்த நிலை மாற்றப்படுகிறது. மேலும், விமான சேவை மற்றும் பிற அரசு சேவைகளும் பாதிப்பை...

இரகசிய அணு ஆயுத சோதனைகள் நடத்தும் 4 நாடுகள் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் மேலும், “இத்தகைய சூழலில் அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதில் தவறில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்தக்...

“என் வெற்றிக்கு டிக்டொக் காரணம்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் வைரல் பதிவு!

அமெரிக்கத் தேர்தலில் தன்னை வெற்றிபெற டிக்டொக் செயலி உதவியது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். டிக்டொக்கை அமெரிக்காவில் தடை செய்யும் முயற்சி தொடர்ந்து நிலுவையில் இருக்கும் வேளையில், ட்ரம்ப் இவ்வாறு விலகிய கருத்தை வெளியிட்டுள்ளார். "நான் டிக்டொக்கை விரும்புகிறேன். அது எனக்கு வெற்றியைத் தந்தது" என ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், டிக்டொக் செயலியை...

ஜப்பானிய பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சர் அமெரிக்காவுக்கு விஜயம்!

அமெரிக்க வரி விதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவதற்குப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஜப்பானிய பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சர் ரியோசி அகாசாவா மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வொஷிங்டனுக்கு பயணமாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் வரி விதிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குக் கடந்த வாரம் இணக்கம் தெரிவித்தனர். வரி விதிப்பு குறித்து...

அமெரிக்காவின் தீர்வை வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தம்..!

உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், சீனாவிற்கான வரியை அவர் அதிகரித்துள்ளதுடன் இது அமெரிக்க - சீன வர்த்தகப் போரை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் பல உலக நாடுகளுக்கான அமெரிக்காவின் புதிய வரி அமுலுக்கு வந்திருந்தது. இதன்படி,...

அமெரிக்காவின் வரி விதிப்பால் இறப்பர் தொழிலாளர்கள் பாதிப்பு..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினரும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இறப்பர் தொழிலாளர்கள் பாரியளவு பாதிப்பை எதிர்நோக்கக் கூடும் என அந்த தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில், சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இறப்பரை அடிப்படையாகக் கொண்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், இலங்கையில் ஆடைத் தொழில்துறை கடுமையாகப்...

வாகனங்களுக்கான புதிய வரியை அறிமுகப்படுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மகிழுந்துகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் மகிழுந்து துறையின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும்...

இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பு!

ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற அமர்வின் போது ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் பரஸ்பர வரிகள்...

டிக்டொக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் ஆர்வம்..!

அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன் டிக்டொக் செயலியைப் பெற்றுக்கொள்வதற்குப் பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் உள்ளன. டிக்டொக் செயலியைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து நிறுவனங்களும் ஏலத்தில் போட்டியிடுவதைக் காண விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம்..!

உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான உத்தரவை கடந்த திங்கட்கிழமை ட்ரம்ப் பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img